4 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விசாரணைக்கு வந்த 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடிகள் சேட்டு என்ற இருதயராஜ், டிங்கி என்ற ஆரோக்கியராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த 2004-ம் ஆண்டு திருச்சி கோர்ட்டுக்கு வந்தனர். அப்போது மணிகண்டம் அருகே அவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முட்டை ரவி, குணா என்ற குணசீலன், ஆனந்த் என்ற முனி ஆனந்த், ஆசாரி என்ற ஏசுதாஸ், மாதவன், சுந்தரபாண்டி, தட்சிணாமூர்த்தி, முருகன் என்ற துரைமுருகன், ஜெயக்குமார், மனோகரன், ரவி என்ற குட்ஷெட் ரவி, கமல் என்ற தண்டாயுதபாணி ஆகிய 12 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோது, முட்டை ரவி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். முனி ஆனந்த், ஜெயக்குமார் ஆகியோர் இறந்து விட்டனர். விசாரணை முடிவடைந்தபின் குணா, சுந்தரபாண்டி, முருகன், மனோகரன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் 4 பேரும் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணை முடிவில், மனுதாரர்களுக்கு விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story