தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
இரட்டை அகலப்பாதை இணைப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை
இரட்டை அகலப்பாதை இணைப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்தில் மாற்றம்
மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட துலுக்கப்பட்டி-கோவில்பட்டி இடையே உள்ள ரெயில் நிலையங்களில் இரட்டை அகலப்பாதைக்கான இணைப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627/22628) நாளை(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16191) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 29-ந் தேதி வரையிலும், அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் இந்த ரெயில் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி மற்றும் 31-ந் தேதிகளில் மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.
நாகர்கோவில்-கோவை
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில் (வ.எண்.16192) நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை மற்றும் அடுத்த மாதம் 2-ந் தேதி ஆகிய நாட்களில் விருதுநகரில் இருந்து தாம்பரம் புறப்பட்டு செல்லும். அத்துடன், வருகிற 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் இந்த ரெயில் மதுரையில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டு செல்லும்.
நாகர்கோவில்-கோவை பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16321) நாளை முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் (வ.எண்.16322) மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்
குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 16128) இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில் அடுத்த மாதம் 1-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்பட்டு நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரைக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மதுரையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16127) வருகிற 26-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நெல்லையில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும்.
மாற்றுப்பாதையில் இயக்கப்படும்
திருச்செந்தூரில் இருந்து மதுரை வழியாக பாலக்காடு வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731/16732) நாளை முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பை, நெல்லை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16729) வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நெல்லையில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து மதுரை புறப்படும் ரெயில் (வ.எண்.16730) 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நெல்லை வரை மட்டும் இயக்கப்படும்.
மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16236) 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் 29-ந் தேதியில் இருந்து வருகிற 2-ந் தேதி வரை இந்த ரெயில் (வ.எண்.16235) விருதுநகரில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்படும்.
மராட்டிய மாநிலம் தாதரில் இருந்து மதுரை வழியாக நெல்லை வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.11021) 26, 29, 30-ந் தேதி ஆகிய நாட்களில் விருதுநகர் வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் 28-ந் தேதி, 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதிகளில் இந்த ரெயில் (வ.எண்.11022) விருதுநகரில் இருந்து தாதர் புறப்பட்டு செல்லும்.
Related Tags :
Next Story