விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 March 2022 2:05 AM IST (Updated: 25 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் வாலிபர் பலி

கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள எஸ்.மலம்பட்டியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் ரஞ்சித், அதே ஊரை சேர்ந்த சசி (25), சந்தோஷ் ஆகியோர் நத்தம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடகத்தை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை சசி ஓட்டினார். ரஞ்சித், சந்தோஷ் இருவரும் பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர், வலையங்குளத்துபட்டி அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சையில் இருந்த ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story