ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 2:05 AM IST (Updated: 25 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் தரப்பில் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை
ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து  டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் தரப்பில் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு குத்தகைக்கு விடும் முடிவுக்கு எதிராக மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், ரெயில்வே தொழிற்சங்கங்கள் ஆகியன தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 28, 29-ந் தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனை ஆதரித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் தரப்பில் மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தனியார்மயம்
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத்தலைவர் ஆன்ட்ரன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் ஹரிலால், சுசோமனன், சங்கரநாராயணன், அகில இந்திய ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்கத்தின் கண்ணன், அகில இந்திய எலக்ட்ரீக்கல் என்ஜினீயர்கள் சங்கத்தின் பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர். அப்போது, மக்களால் உருவாக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே, எல்.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்களில் செய்துள்ள திருத்தங்களை நீக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பி.எப்., இ.எஸ்.ஐ. அமலாக்கப்பிரிவை முடக்கக்கூடாது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அமைப்புகளை முடக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில், சவுந்திரராஜன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்டத்தை சேர்ந்த ஏராளமான ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story