பட்டா திருத்த சிறப்பு முகாம்


பட்டா திருத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 25 March 2022 2:07 AM IST (Updated: 25 March 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

பட்டா திருத்த சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு குறிப்பிட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அரியலூர் தாலுகாவில் புதுப்பாளையம், கோவில் எசணை (மேற்கு, கிழக்கு), தூத்தூர், இலந்தைகூடம், பார்ப்பனச்சேரி ஆகிய கிராமங்களில் அந்தந்த கிராம சேவை மையக் கட்டிடத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் தா.பழுர், ஜெயங்கொண்டம், கோடங்குடி (வடக்கு), குண்டவெளி (கிழக்கு, மேற்கு) ஆகிய கிராமங்களில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலத்திலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும். மேற்படி சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயனடையலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story