முதியவருடன் தகராறு; ஊராட்சி உறுப்பினர் உள்பட 3 பேர் மீது வழக்கு


முதியவருடன் தகராறு; ஊராட்சி உறுப்பினர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 March 2022 2:07 AM IST (Updated: 25 March 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

முதியவருடன் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக ஊராட்சி உறுப்பினர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல்(வயது 67). இந்த கிராமத்தில் மிக்கேல் வசித்து வரும் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பவத்தன்று நேரடி கள ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அந்த பகுதியின் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சூசை என்பவருக்கும், மிக்கேலுக்கும் இடையே குடிநீர் வினியோகம் ெதாடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சூசை, அவரது மனைவி ரெஜினா மேரி, மகன் பிளமின்ராஜ் ஆகியோர் மிக்கேலை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் தா.பழூர் போலீசில் மிக்கேல் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் விசாரணை நடத்தி வார்டு உறுப்பினர் சூசை, ரெஜினாமேரி, பிளமின்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story