புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது. சிக்னல், வேகத்தடைகள் இல்லாத காரணங்களால் சாலையில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் மாணவர்கள், ெபாதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆனந்தன், காளையார்கோவில்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் ராஜபாளையம் 15-வது வார்டு குமரன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது சாலைகளில் தேங்கியுள்ளது. தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
ராஜேஷ், ராஜபாளையம்.
நாய்கள் தொல்லை
மதுரை கடச்சனேந்தல் எல்.கே.டி.நகர் 2-வது காலனி மற்றும் வைரமணி நகாில் ஏராளமான நாய்கள் சாலையில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. காலையில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் இவை இரவில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ரவிக்குமார், மதுரை.
விபத்து அபாயம்
ராமநாதபுரம் முதுகுளத்தூர் பேரூராட்சி சாலையில் மாடுகள் அதிக அளவில் நடமாடுகின்றன. சாலையில் செல்லும் பெண்கள், குழந்தைகளை மாடுகள் மூட்டி காயத்தை ஏற்படுகின்றன. இரவில் சாலையிலேயே படுத்து உறங்கி போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்துகின்றன. இதனால் தினமும் இப்பகுதியில் சிறு,சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
பாண்டியன், முதுகுளத்தூர்.
நூலகம் தேவை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் பொது நூலக வசதி இல்லை. சிவில் சர்வீசஸ், டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர். நூலக வசதி இல்லாத காரணத்தால் பல கிலோமீட்டர் சென்று தனியார் பயிற்சி மையங்களில் படிக்க வேண்டிய நிலை நிலவுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் பொது நூலகத்தை ஏற்படுத்தி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவுவார்களா?
கவிசேனா, அருப்புக்கோட்டை.
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
மதுரை மாட்டுத்தாவணி-கிடாரிப்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப காலமாக இந்த பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பஸ்சை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.
அழகுராஜா, கிடாரிபட்டி.
குண்டும், குழியுமாக சாலை
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே செட்டிநாடு கிராமம் தனியார் பாலிெடக்னிக் கல்லூரி-சோலையாண்டவர் கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அடிக்கடி இந்த சாலையில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணமும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க முன் வருவார்களா?
சோலையன், சாக்கோட்டை.
Related Tags :
Next Story