நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண் காவலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண் காவலாளி மீது தாக்குதல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண் காவலாளி மீது தாக்குதல் குறித்த புகாரின் பேரில் வாலிபர் கைது
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் லூர்து ரஞ்சித் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தார்.
இந்த நிலையில் லூர்து ரஞ்சித் நேற்று முன்தினம் தனது மனைவியை பார்ப்பதற்காக வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி சிவந்திபட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்துஇசக்கி (26), லூர்து ரஞ்சித்திடம் உள்ளே செல்லக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர், முத்து இசக்கியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலன் வழக்குப்பதிவு செய்து லூர்து ரஞ்சித்தை கைது செய்தார்.
Related Tags :
Next Story