பேட்டை: வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து சேதம்


பேட்டை: வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 25 March 2022 2:27 AM IST (Updated: 25 March 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

வைக்கோல் படப்புகள் தீப்பிடித்து எரிந்தது

பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த பழவூர் பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் உச்சிமகாளி (40). இவர் தனது வீட்டின் அருகில் வைக்கோல் படப்புகளை வைத்திருந்தார். நேற்று இரவில் அந்த வைக்கோல் படப்புகளில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் படப்புகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story