திருச்சி என்.ஐ.டி.யில் மாரத்தான் போட்டி
திருச்சி என்.ஐ.டி.யில் மாரத்தான் போட்டி நடைபெற்றது
திருச்சி
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் உள்பட 14 துறைகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியை முன்னிட்டு மாரத்தான் போட்டி என்.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றது. இயக்குனர் அகிலா கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தார். டீன்கள் குமரேசன், ஜெரால்டு, முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் என்.ஐ.டி. வளாகத்தை 3 முறை சுற்றி 10 கிலோமீட்டர் தொலைவு கடக்க வேண்டும். மாணவிகள் வளாகத்தை 2 முறை சுற்றி 6 கிலோமீட்டர் தூரம் கடக்க வேண்டும். மாரத்தான் போட்டியை முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் முன்னாள் மாணவரான 73 வயதுடைய ராமசுப்பிரமணியன் கவுரவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story