வாசுதேவநல்லூர் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; முதியவர் பலி
வாசுதேவநல்லூர் அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே கார், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
முதியவர்
சிவகிரி தாலுகா ஆத்துவழி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது (வயது 72). இவர் நேற்று காலையில் பக்கத்து ஊரான திருமலாபுரம் என்ற அருளாட்சியில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
வாசுதேவநல்லூர் அருகே ஒத்தக்கடை விலக்கு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முகம்மது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்ததும், வாசுதேவநல்லூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த முகம்மதுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த புளியங்குடியைச் சேர்ந்த முகைதீன் அப்துல்காதரை (40) கைது செய்தனர்.
Related Tags :
Next Story