போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது


போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 2:55 AM IST (Updated: 25 March 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

ஜீயபுரம்
திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் ெசல்போனை உபயோகித்தபோது அங்கு வந்த மூர்த்தி(வயது 40), பரணி(21) மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து உனக்கு செல்போன் ஏது என்று கேட்டு மாணவியை சில்மிஷம் செய்து அதனை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, பரணி ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story