மாரியம்மன் கோவில் தேரோட்டம்; வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்
ஊஞ்சலூா் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூா் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மாரியம்மன் கோவில்
ஊஞ்சலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட 60 அடி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேரோட்டம்
நேற்று கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து மாலை 6.15 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
விநாயகர் ேதர் முன்னால் சென்றது. இதையடுத்து மாரியம்மன் தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். தேரானது ரத வீதி, மெயின் ரோடு வழியாக வந்து நிலையை அடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story