கோபி அருகே அறுவடை செய்யப்பட்ட வாழை மரத்தில் இருந்து குலைதள்ளிய பூவன்தார்
கோபி அருகே அறுவடை செய்யப்பட்ட வாழை மரத்தில் இருந்து குலைதள்ளிய பூவன்தார்
கடத்தூர்
ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவருடைய தோட்டம் கோபி அருகே வெள்ளாளபாளையம் பிரிவில் உள்ளது. இங்கு அவர் பூவன் ரக வாழைகளை சாகுபடி செய்து இருந்தார். நன்கு விளைந்ததை தொடர்ந்து வாழைக்குலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடை செய்தார்.
இந்த நிலையில் சேகர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது வெட்டப்பட்ட வாழை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து பூவன் தார் குலை வெளியே தள்ளியது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினரிடமும் கூறினார். அதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து அதிசய வாழையை பார்த்துவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story