ஈரோட்டில் காடா துணி வாங்கி ரூ.1½ கோடி மோசடி; வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

ஈரோட்டில் காடா துணி வாங்கி ரூ.1½ கோடி மோசடி; வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 25 March 2022 2:56 AM IST (Updated: 25 March 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் காடா துணி வாங்கி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் காடா துணி வாங்கி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி உரிமையாளர்கள்
ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
நாங்கள் ஈரோடு மாநகர் பகுதியில் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் ரயான் காடா துணிகளை ஈரோட்டை சேர்ந்த தரகர் மூலம் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தோம்.
ரூ.1½ கோடி மோசடி
தற்போது அந்த வட மாநிலத்தை சேர்ந்தவர் எங்களுக்கு பணம் தராமல் தலைமறைவாகி விட்டார். தரகரிடம் இதைப்பற்றி கேட்ட போது அவரும் முறையாக பதில் கூறவில்லை. எங்களிடம் ரூ.1½ கோடி மதிப்பிலான காடா துணிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மோசடி செய்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் அவரிடம் விற்பனை செய்த காடா துணிக்கான பணத்தை பெற்றுத் தர  வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story