ஆசனூர் அருகே தண்ணீர் தேடி ரோட்டை கடந்த யானைகள்


ஆசனூர் அருகே தண்ணீர் தேடி ரோட்டை கடந்த யானைகள்
x
தினத்தந்தி 25 March 2022 2:57 AM IST (Updated: 25 March 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே தண்ணீர் ேதடி யானைகள் ரோட்டை கடந்து சென்றன.

தாளவாடி
ஆசனூர் அருகே  தண்ணீர் ேதடி யானைகள் ரோட்டை கடந்து சென்றன.
கடும் வறட்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் மான், சிறுத்தை, யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானை போன்ற விலங்குகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையோரங்களுக்கு வருகின்றன. 
ரோட்டை கடந்த யானைகள்
 நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் தண்ணீர் தேடி ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடந்து சென்றன.
இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்தி கொண்டனர். ஒரு சிலர் வாகனங்களில் இருந்தபடியே தங்கள் செல்போனில் யானைகளை புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு யானைகள் சாலையை கடந்ததும் வாகனங்கள் அங்கிருந்து சென்றன. 
வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று தான். எனவே வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லவேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story