சுரண்டை: எலக்ட்ரீசியன் தற்ெகாலை


சுரண்டை: எலக்ட்ரீசியன் தற்ெகாலை
x
தினத்தந்தி 25 March 2022 3:04 AM IST (Updated: 25 March 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

எலக்ட்ரீசியன் விஷம் குடித்து இறந்தார்

சுரண்டை:
சுரண்டை அழகாபுரிபட்டணம் பகுதி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் நல்லசிவன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவரது மனைவி கணபதி. நல்லசிவனுக்கு கடன் அதிகமாக இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நல்லசிவன் தனது மனைவியிடம் சொல்லாமல் வெளியூருக்கு சென்றுவிட்டார். இதையடு்த்து கணபதி தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு சுரண்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நல்லசிவன் தனது மனைவியை செல்போனில் தொடர்புகொண்டு, ‘கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது. இனி என்னால் வாழ முடியாது. எனவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். தற்போது சுந்தரபாண்டியபுரம் அருகே ஒரு காட்டுப்பகுதியில் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுந்தரபாண்டியபுரம் காட்டுப்பகுதியில் தேடியதில், அங்கு நல்லசிவன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நல்லசிவன்  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story