ஆலங்குளம்: புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது


ஆலங்குளம்: புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 3:12 AM IST (Updated: 25 March 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் மூவரையும் கைது செய்தனர்

ஆலங்குளம்:
ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் மர்மநபர்கள் சிலர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் சென்றனர். அங்கு முருகன் (வயது 45), லோக பாக்கியச்செல்வன் (31), கருவேலம் ஆகியோர் இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 125 கிலோ எடையுள்ள ரூ. 79 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story