சிவகிரியில் புதிய குடிநீர் தொட்டி அமைப்பு


சிவகிரியில் புதிய குடிநீர் தொட்டி அமைப்பு
x
தினத்தந்தி 25 March 2022 3:29 AM IST (Updated: 25 March 2022 3:29 AM IST)
t-max-icont-min-icon

புதிய குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகத்தை தொடங்கி வைத்தனர்

சிவகிரி:
சிவகிரி நகர பஞ்சாயத்து 8-வது வார்டைச் சேர்ந்த கீழ மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சீராக தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து அவர் நேரில் சென்று ஆய்வு செய்து, புதிதாக குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தார். அவர் தண்ணீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சிக்குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story