கடையம் கவுன்சிலர்கள் வாழ்த்து பெற்றனர்
கடையம் கவுன்சிலர்கள் வாழ்த்து பெற்றனர்
கடையம்:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட கடையம் யூனியன் கவுன்சிலர்கள் புளி கணேசன், ஜனதா, தங்கம், மணிகண்டன், இசக்கியம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதேபோல் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அ.தி.மு.க. வழிகாட்டுக்குழு உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
Related Tags :
Next Story