தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது
நெல்லை:
நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் கணேஷ்குமார் ஜானி தலைமையில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம், அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் ‘‘மண்டல ஆணையாளர்-1, வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்.ஜி.ஓ. ‘பி’ காலனி, திருநெல்வேலி-7’’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மனு உறையின் மேல் ‘‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’’ என்றும் மனுதாரர்களின் செல்போன் எண் ஆகியவற்றை எழுதி வருகிற 31-ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
வருகிற 11-ந்தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரையில் தொழில் அதிபர்களுக்கும், 3 மணி முதல் மாலை 4 மணி வரையில் வருங்கால வைப்புநிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் மனு அனுப்பியவர்கள் பங்கேற்று, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையாளர் கணேஷ்குமார் ஜானியை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை நெல்லை வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story