தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து
சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு மாதவரம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு மாதவரம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் மஸ்தான் கோவில் அருகே சென்றபோது, நிலைத்தடுமாறிய லாரி தறிக்கெட்டு ஓடி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை இடித்து தள்ளிய நிலையில், சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி நின்றது.
இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரிகரன் (வயது 30) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story