விருதம்பட்டில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
விருதம்பட்டில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விருதம்பட்டு சில்க்மில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை மடக்கி போலீசார் விசாரித்தனர். அதில், ஒருவர் காட்பாடி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 26) என்பதும், மற்ற 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக காட்பாடி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடியதும், அந்த வாகனங்களை காட்பாடியில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. அதையடுத்து சிறுவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story