ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஆற்காடு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு தோப்புக்கானா பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது 28) என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை போலீசார்கைது செய்து, அவரிடமிருந்து மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story