சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை


சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட  விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 March 2022 4:41 PM IST (Updated: 25 March 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 31-ந் தேதிக்குள் சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை

வருகிற 31-ந் தேதிக்குள் சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இதில் நேற்றைய நிலவரப்படி 97.80 அடி வரை தண்ணீர் உள்ளது. அதன் படி சாத்தனூர் அணையில் தற்போதைய நிலவரப்படி 3,441 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் அணையின் இடபுறம் மற்றும் வலது புறம் உள்ள கால்வாய் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இடபுறக் கால்வாய் பகுதியில் 40 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 327.37 மில்லியன் கன அடி ஆகும். தற்போது ஏரிகளில் 32.73 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. 
சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன், பொதுப்பணித்துறை (நீர்வளம்) கண்காணிப்பு பொறியாளர் சாமுராஜ், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சிவக்குமார், ராஜேஸ், மதுசூதனன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். சாத்தனூர் அணை நீர் தேக்க திட்ட குழுத் தலைவர் ஜெயராமன் வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- 

வருகிற 31-ந் தேதிக்குள் சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

குறையாமல் 50 நாட்களுக்கு...

கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்ல அனைத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் தூர்வார வேண்டும். ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாவுபட்ட கிராமத்திற்கு தனி மதகு அமைத்து தர வேண்டும். குறையாமல் 50 நாட்களுக்கு மேல் தண்ணீர் திறந்து விட்டாமல் மட்டுமே ஏரிகளுக்கு தண்ணீர் வரும். விவசாயிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

வேலையம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முக்கியமாக சாத்தனூர் அணையை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது பதில் அளித்த அதிகாரிகள், நாங்களும் வருகிற 31-ந் தேதிக்குள் தண்ணீர் திறந்து விடுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இது குறித்து உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அரசிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story