பெண்ணிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது


பெண்ணிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 5:18 PM IST (Updated: 25 March 2022 5:18 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

திருவெறும்பூர்,மார்ச்.26-
திருவெறும்பூரை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் விஜயகாந்த் (32). இவர் பாலாஜி நகரில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அதே பகுதியை சேர்ந்த சசிகுமாரின் மனைவி ரூபா(30) வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று  காலையில் ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூபாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்ததோடு, கடையில் இருந்து 5 லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட்டுகளையும் எடுத்துக்கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபாவின் செல்போனை பறித்துச்சென்ற குழுமணி அக்ரஹாரம் பேரூரை சேர்ந்த சக்திவேல்(35), திருச்சி கீழ ஆண்டாள் வீதியை சேர்ந்த காளிதாஸ்(32), ஆட்டோவை ஓட்டி வந்த மேல தேவதானத்தை சேர்ந்த சுதாகர்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Next Story