என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் என்.சி.சி. தரைப்படை மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது. இதை கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சுனில் உத்தம் அறிவுரையின் பேரில், லெப்டினன்ட் சிவமுருகன் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு 29-வது தனி கம்பெனியின் 68 என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர். 3 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு, என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கியால் சுடுவது குறித்து பயிற்சி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் இலக்ைக நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒவ்வொரு மாணவரும் தலா 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு அசத்தினர். நிகழ்ச்சியில் சுபேதார் முருகேசன், ரவிகுமார், சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த துப்பாக்கி சுடும் இறுதிநாள் பயிற்சியில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், மதுரை, கோவையில் அடுத்தடுத்து நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக அகதர மதிப்பீட்டு குழுவின் சார்பில், ‘சுற்றுச்சூழலை பாதுகாத்தல்’ என்ற தலைப்பின் கீழ் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், மாங்குரோவ் காடுகளின் நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினார். முன்னதாக அகதர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். முடிவில் பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள் பாகீரதி, பென்னட், ராஜ்பினோ மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story