சூட்டை தணிக்கும் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை
சூட்டை தணிக்கும் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை
வெயிலுக்கு சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூட்டைத்தணிக்கும் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சேவூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2 வாரகாலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காண முடிகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சுகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை சேவூர் பகுதிகளில், சிறு வியாபாரிகள் சைக்கிள்களில் ஊர் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். சூட்டை தணிக்கும் வெள்ளரிப் பிஞ்சு விற்பனை சூடு பிடித்துள்ளது.
.
Related Tags :
Next Story