வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 6:43 PM IST (Updated: 25 March 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்;
கோட்டூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பயிர்க்காப்பீட்டு தொகை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் எளவனூர் வருவாய் கிராமத்துக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 6 மாத காலம் கடந்தும் வழங்கவில்லை. இதையடுத்து விவசாயிகள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். 
இதையடுத்து அதிகாரிகள், விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜனவரி 30-ந் தேதிக்குள் பயிர்க்காப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 
முற்றுகை போராட்டம்
ஆனால் இதுவரை பயிர்க்காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் நேற்று கோட்டூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பரந்தாமன், எளவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஒன்றிய தலைவர் சிவசண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் உத்திராபதி, கோட்டூர் உதவி இயக்குனர் தங்கபாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது. 
அதிகாரிகள் உறுதி
ஆகையால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதிக்குள் விவசாயிகளுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக பயிர்க்காப்பீட்டு தொகை செலுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 


Next Story