தி.மு.க.வினர் பொய் வழக்கு போடுகிறார்கள்
அ.தி.மு.க.வின் எழுச்சியை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் பொய் வழக்கு போடுகிறார்கள் என்று திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
திருச்சி, மார்ச்.26-
அ.தி.மு.க.வின் எழுச்சியை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் பொய் வழக்கு போடுகிறார்கள் என்று திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
நிபந்தனை ஜாமீன்
தி.மு.க. தொண்டர் தாக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் 2 வாரங்கள் தங்கி இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் 6 நாட்கள் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி அவர் கடந்த 14-ந்தேதி முதல் கைெயழுத்திட்டார். கடைசி நாளான இன்று கையெழுத்திட்ட ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் தங்கியிருந்த 14 நாட்களில் எனக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் காட்டிய அன்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
துபாய் பயணம்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது அவருடைய சொந்த பயணத்திற்காகவா அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்காகவா? என்று தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2 கோடியே 14 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். 5 வருடத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிதி பட்ஜெட்டில் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை.
கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என்று தி.மு.க.வினர் மக்களை திசைதிருப்பி ஏமாற்றி வாக்குகளை பெற்றார்கள். தாலிக்கு தங்கம் என்கிற மகத்தான திட்டத்திற்கு மூடு விழா செய்து விட்டனர். நிதிநிலையை பெருக்குவதற்கு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளது என்பதனை யோசிக்கவே இல்லை. அதற்காக அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் குழு இதுவரை என்ன செய்துள்ளது. திறமையற்ற நிர்வாகம் தமிழகத்தை ஆண்டு வருகிறது.
பொய் வழக்கு
அ.தி.மு.க.வின் எழுச்சியைப் பார்த்து தி.மு.க.வினர் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய் வழக்கு போடுகிறார்கள். இது மன்னராட்சி அல்ல, மக்களாட்சி நீதிமன்றத்தை நம்புகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தவறு செய்யும் போது நீதிமன்றம் தட்டி கேட்கும் என்று நம்புவதால் எங்களுக்கு பயமில்லை.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story