அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு
திருச்சி அம்மா மண்டபத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, மார்ச்.26-
திருச்சி அம்மா மண்டபத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்மா மண்டபம் படித்துறை
108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் சாமி தரிசனத்துக்காக வந்து செல்கிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் அம்மா மண்டபம் உள்ளது.
அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, ஆடிப்பெருக்கு விழாவின் போது, குடும்பத்துடன் வந்து புனித நீராடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறும்.
இதற்காக ஏராளமானோர் அம்மாமண்டபத்துக்கு வருகிறார்கள். பக்தர்கள் அதிகமாக வரும் அம்மா மண்டபத்தில் புதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு
இந்தநிலையில் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில் அம்மா மண்டபத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக நீர்வளத்துறை மூலம் அம்மா மண்டபத்தை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது.
ஒரு சில வாரங்களில் திட்டப்பணிகளுக்காக டெண்டர் விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் படித்துறை விரிவாக்கம், விசாலமான பிரத்யேக திதி மண்டபம், போலீஸ் கண்காணிப்பு கோபுரம், பக்தர்கள் உடை மாற்ற ஆண் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி அறைகள், நடைபாதை, சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெறுகிறது.
ஒரேநேரத்தில் 100 புரோகிதர்கள் 2 வரிசையில் அமர்ந்து மந்திரங்கள் ஓதுவதற்கும் போதுமான இட வசதி செய்யப்படுகிறது. இதில் நடைபாதை மட்டும் 250 மீட்டர் தூரத்துக்கு இடம் பெறுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த 3 மாதங்களில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story