மரங்களை வெட்டிய மர்ம கும்பல்


மரங்களை வெட்டிய மர்ம கும்பல்
x
தினத்தந்தி 25 March 2022 7:24 PM IST (Updated: 25 March 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

மரங்களை வெட்டிய மர்ம கும்பல்

துறையூர், மார்ச்.26-
துறையூரை அடுத்த காட்டுக்குளம் ஊராட்சியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஆண்டி குட்டை உள்ளது. இங்கு வேப்பமரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த குட்டையில் உள்ள வேப்ப மரங்களை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் வெட்டி கொண்டிருந்ததை அப்பகுதியினர் பார்த்து கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அவர் அங்கு சென்ற போது, மர்மநபர்கள் மரம் அறுக்கும் எந்திரம், மேலும் வெட்டிய மரத்துண்டுகளை போட்டு விட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலிவலத்தை அடுத்த  திருப்பத்தூர் ஊராட்சியில் பனைமரங்களை மர்மநபர்கள் வெட்டி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் சம்பவங்களை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story