இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 8:21 PM IST (Updated: 25 March 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

அக்னிதீர்த்த கடலில் இறங்கி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் நேற்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொடர்ந்து விலை உயர்ந்து வரும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோவிலின் எதிரே சன்னதி தெரு பகுதியில் இருந்து கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாரிஸ் குரு சர்மா, மாரீஸ், ரஞ்சித் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா, சுந்தரி லட்சுமி உள்ளிட்டோர் சமையல் எரிவாயு மற்றும் அடுப்புடன்  ஊர்வலமாக அக்னி தீர்த்த கடற்கரை நோக்கி சென்றனர்.அங்கு  சமையல் எரிவாயு மற்றும் அடுப்பை அக்னி தீர்த்த கடலில் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story