பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 8:35 PM IST (Updated: 25 March 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

கண்டிகை காலனியை சேர்ந்த பெண்ணை தாக்கிய வாலிபரை கைது செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வி.ஜி.ஆர். கண்டிகை காலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி வேண்டா (வயது 42). இவர் நேற்று தனது வீட்டு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே காலனியை சேர்ந்த தன்ராஜ் (32) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து அவர் மீது மோதினார். பின்னர் வேண்டாவை கற்களால் தாக்கியும், கைகளால் அடித்து காயப்படுத்தினார். இந்த தாக்குதலில் காயமடைந்த வேண்டா சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்ராஜை கைது செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர்.


Next Story