பொள்ளாச்சி கோவை ரோட்டில் தடுப்புகளால் விபத்து அபாயம்


பொள்ளாச்சி  கோவை ரோட்டில் தடுப்புகளால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 25 March 2022 8:42 PM IST (Updated: 25 March 2022 8:42 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

விபத்து 

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையில் வங்கிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்களும் உள்ளன. இதனால் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதற்கிடையில் 4 வழிச்சாலையின் நடுவில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தடுப்புகள் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிகள், தலைவர் வருகையின் போது தடுப்புகளில் கொடிகளை கட்டுகின்றனர். இதற்காக சாலை தடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் கொடிகளை அகற்றுபவர்கள் தடுப்புகளில் உள்ள குச்சிகளை அகற்றுவதில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

குச்சிகளால் உயிரிழப்புகள்

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதற்கிடையில் கட்டிடங்களில் வாகன நிறுத்தும் இடவசதி இல்லாததால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டிய உள்ளது. இதனால் 4 வழிச்சாலையாக இருந்தாலும் வாகனங்கள் வரிசையாக தான் செல்ல வேண்டிய உள்ளது. இதற்கிடையில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் குச்சிகள் சுமார் 2 அடி வரை நீண்டு கொண்டிருக்கிறது. இந்த குச்சிகள் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொடிகளை கட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் குச்சியில் மோதி ஒரு வாகன ஓட்டிக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பின்னால் வாகனங்கள் வராததால் உயிர்தப்பினார். எந்தவித அனுமதியும் பெறாமல் தான் கொடிகளை கட்டுகின்றனர். ஆனால் கொடிகளை அகற்றும் போது குச்சிகளை அகற்றுவதில்லை. சில நேரங்களில் குச்சிகளுடன், கொடிகள் சாலையில் குறுக்கே விழுந்து விடுகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுப்புகளில் உள்ள குச்சிகளால் உயிரிழப்புகள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story