பத்மநாபபுரம் அரண்மனையில் பேரிடர் மீட்பு ஒத்திகை


பத்மநாபபுரம் அரண்மனையில் பேரிடர் மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 25 March 2022 9:25 PM IST (Updated: 25 March 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

தக்கலை:
பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது அதில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தக்கலை அருேக உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தது. சென்னை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை 4-வது பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் ஹரிநாரணன் பாண்டே தலைமையில் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். அவர்களுடன் மருத்துவக்குழு, மின்வாரியத்துறை, வருவாய்த்துறை, தமிழ்நாடு தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பேரிடரில் சிக்கியவரை எவ்வாறு மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை நடித்து காட்டினர். இதை சுற்றுலா பயணிகள் பலரும் வேடிக்கை பார்த்தனர்.
நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, தக்கலை போலீஸ் துணைக்கண்காணிப்பாளர் கணேசன், கல்குளம் தாசில்தார் வினோத், கிராம நிர்வாக அலுவலர்கள் வேலப்பன், விஜயகுமார், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் சரவணபாபு, உதவி அலுவலர் இம்மானுவேல், தக்கலை நிலைய அலுவலர் ஜீவன்ஸ், தக்கலை அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள் கோலப்பன், தமிழரசன், பத்மனாபபுரம் நகராட்சி பொறியாளர் லதா, மூலச்சல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முகமது அலி, பத்மநாபபுரம் அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story