வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 9:25 PM IST (Updated: 25 March 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகையில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மதுசூதனன் முன்னிலை வகித்தார்.
 இதில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
காலிப்பணியிடங்கள்
எல்.ஐ.சி. மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பஞ்சப்படியுடன் கூடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
 மக்கள் மீது அதிகப்படியான சேவை கட்டணங்களை விதிக்கக்கூடாது. வங்கி வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக மாற்ற வேண்டும்.
வராக்கடன்கள்
 வராக்கடன்களை உடனடியாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story