ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்


ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 March 2022 10:09 PM IST (Updated: 25 March 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் செயல் அலுவலராக இருந்தவர் ஜோதி. இவர், தேன்கனிக்கோட்டை பேட்ராயசாமி கோவில் செயல் அலுவலராகவும் இருந்தார். இந்த நிலையில், இவரது மேற்பார்வையில் உள்ள பேட்ராய சாமி கோவில் சொர்க்கவாசல் கோபுரம் சமீபத்தில் இடிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு செயல் அலுவலர் ஜோதி தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், செயல் அலுவலர் ஜோதியை, திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து உரிய அனுமதி பெறாமல் தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிக்கு பதிலாக, பேளகொண்டப்பள்ளி பலகைக்கரகம் கோவில் செயல் அலுவலர் நடராஜன் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். கோவில் பெண் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story