ஊட்டி குன்னூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்த 38 ஏக்கர் நிலம் மீட்பு
ஊட்டி, குன்னூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த 38 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டி, குன்னூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த 38 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
நீர்நிலை ஆக்கிரமிப்பு
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய் கள், நீரோடைகள் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது என்று வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர்.
தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஊட்டி அருகே தும்மனட்டி மதுரை வீரன் காலனி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 10 சென்ட் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆர்.டி.ஓ. துரைசாமி ஆய்வு செய்து மீட்டார்.
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட சதுப்பு நிலமான 4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
38 ஏக்கர் நிலம் மீட்பு
இந்தநிலையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பை மீட்கும் பணி நடந்தது. ஊட்டி ஆர்.டி.ஓ.துரைசாமி மற்றும் அதிகாரிகள் பிங்கர்போஸ்டில் 2.90 ஏக்கர் நிலம், ஆடாசோலை பகுதியில் 2.95 ஏக்கர், குந்தா தாலுகாவில் பிக்கட்டியில் 12.90 ஏக்கர், உள்பட மொத்தம் 37 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
அதுபோன்று குன்னூர் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் மஜித் ஆகியோர் ஆய்வு யெ்தனர். அதில் மொத்தம் ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
மொத்தத்தில் ஊட்டி, குன்னூரில் 38 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story