போடியில் விஷம் குடித்து வாலிபர் சாவு
போடியில் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்துபோனார்.
போடி:
போடி திருமலாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் மணி (வயது 27). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது தந்தையிடம் மணி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது இளங்கோவன் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மணி நேற்று முன்தினம் சங்கராபுரம் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மணியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்துபோனார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story