அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் விரைவில் திறக்க ஏற்பாடு


அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் விரைவில் திறக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 25 March 2022 10:15 PM IST (Updated: 25 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டியில் அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கோபால்பட்டி: 

நத்தம், சாணார்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் புகார் கொடுக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சாணார்பட்டியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சாணார்பட்டி பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தில் அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பழமையான அந்த கட்டிடத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

இந்த பணிகளை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் ெசன்று பார்வையிட்டார். இந்த மகளிர் போலீஸ் நிலையத்தின்கீழ் சாணார்பட்டி, நத்தம், திண்டுக்கல் தாலுகா, அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, தாடிக்கொம்பு ஆகிய ஊரக பகுதிகள் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான திறப்பு விழா அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் நடைபெறவுள்ளது என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story