ஊராட்சி அலுவலக கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்படுமா
வலங்கைமான் அருகே ஊராட்சி அலுவலக கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வலங்கைமான்;
வலங்கைமான் அருகே ஊராட்சி அலுவலக கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
விருப்பாட்சிபுரம் ஊராட்சி அலுவலகம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சி அலுவலகம் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இப்பகுதியில் ஒரு அறை வசதியுடன் தற்போது இயங்கி வரும் ஊராட்சி அலுவலக கட்டிடம் போதிய வசதி இல்லாமல் உள்ளது. தற்போதைய கட்டிடம் நிர்வாக பணிகளுக்கு வசதி இல்லாமலும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், கூடுதல் வசதியுடன் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
விரைந்து முடிக்க கோரிக்கை
இதைத்தொடர்ந்து நிதி ஒதுக்கீடு பிரிவில் டெண்டர் விடப்பட்டு புதிய ஊராட்சி அலுவலக கட்டிட பணிகள் தொடங்கியது. இருப்பினும் அந்த கட்டிட பணிகள் முழுமை அடையாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கட்டிடத்தின் உறுதிதன்மை, கம்பிகளின் உறுதிதன்மை கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து விருப்பாட்சிபுரம் ஊராட்சி அலுவலக கட்டிட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story