கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடிய வாலிபர் கைது
கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வசந்தராஜ் (வயது 26). இவர் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள டீ கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் வசந்தராஜ் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைக்கப்பட்டிருந்த ரூ.250-ஐ திருடிக் கொண்டு அங்கிருந்து நழுவ முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வசந்தராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பணத்தை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் வடலூர் கருங்குழியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் செந்தில்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story