திருக்கோவிலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி
திருக்கோவிலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது அறிவிக்கப்படாத மின் தடை இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் திருக்கோவிலூரில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து காலை 7 மணி வரை மின் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உரிய பதில் மற்றும் காரணத்தை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைகண்டித்து திருக்கோவிலூர் துணை மின் நிலையம் முன்பு நாளை(திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story