பழனி முருகன் கோவிலில் ரூ.3½ கோடி வருவாய்


பழனி முருகன் கோவிலில் ரூ.3½ கோடி வருவாய்
x
தினத்தந்தி 25 March 2022 10:51 PM IST (Updated: 25 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் ேகாவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.3½ கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பழனி: 

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை உண்டியலில் செலுத்துகின்றனர். இவை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. விழாவை தொடர்ந்து நேற்று  பழனியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ரூ.2 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 910 காணிக்கையாக கிடைத்தது. மேலும் தங்கம் 808 கிராம், வெள்ளி 10 கிலோ (10,023 கிராம்), வெளிநாட்டு கரன்சி 128 கிடைத்தது. அதைத்தொடர்ந்து இன்று  2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 43 ஆயிரத்து 10, தங்கம் 533 கிராம், வெள்ளி 3,359 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 51 ஆகியவை கிடைத்தது.

இவ்வாறு பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நடந்த உண்டியல் காணிக்கை மூலம் பழனி முருகன் கோவிலில் வருவாயாக ரூ.3 கோடியே 58 லட்சத்து 87 ஆயிரத்து 920, தங்கம் 1,341 கிராம், வெள்ளி 13 ¼ கிலோ (13,382 கிராம்), வெளிநாட்டு கரன்சி 179 கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story