தாதா தாவூத் இப்ராகிமை கொல்ல தைரியம் இருக்கிறதா?- பா.ஜனதாவுக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி


படம்
x
படம்
தினத்தந்தி 25 March 2022 10:54 PM IST (Updated: 25 March 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

பின்லேடனை ஒபாமா கொன்றது போல தாதா தாவூத் இப்ராகிமை கொல்ல தைரியம் இருக்கிறதா என்று பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.

மும்பை, 
பின்லேடனை ஒபாமா கொன்றது போல தாதா தாவூத் இப்ராகிமை கொல்ல தைரியம் இருக்கிறதா என்று பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.  
 மந்திரி நவாப் மாலிக் கைது 
மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக் கடந்த மாதம் 23-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் நவாப் மாலிக் சொத்துக்கள் வாங்கியதாகவும், அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பினும் மந்திரி நவாப் மாலிக் பதவியை ராஜினாமா செய்யவில்லை. 
இதனால் நவாப் மாலிக்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. இதற்காக அவர்கள் சட்டசபையை முடக்கி வருகின்றனர். மேலும் சட்டசபைக்கு வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
உத்தவ் தாக்கரே கண்டனம்
இந்த விவாகரம் தொடர்பாக மராட்டிய சட்டசபையில் நேற்று காரசார விவாதம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். 
இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்து பேசினார். அப்போது அவர் பா.ஜனதா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி கண்டனம் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் பேசியதாவது:- 
எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நவாப் மாலிக் மும்பை மற்றும் நாடு முழுவதும் சாதாரணமாக சுற்றித்திரிந்து, 4, 5 முறை தேர்தல்களில் வெற்றி பெற்று மந்தியான பிறகும் மத்திய முகமைகளுக்கு அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி என தெரியவில்லையா?. மத்திய முகமைகள் அவ்வளவு மோசமானதாகவா உள்ளது. அமலாக்கத்துறை உங்கள் வீட்டு வேலைக்காரர்களா?
தாவூத்தை கொல்லுங்கள்
ஒருகாலத்தில் ராமர் கோவில் பிரச்சினையை வைத்து பா.ஜனதா ஓட்டு கேட்டது. தற்போது தாவூத் இப்ராகிம் பிரச்சினையை வைத்து ஓட்டு கேட்க உள்ளது. தாவூத் இப்ராகிம் எங்கே?. யாருக்காவது தெரியுமா, யாருக்கும் தெரியாது. பா.ஜனதா கோபிநாத் முண்டே உயிரோடு இருக்கும்போது தாவூத் இப்ராகிமை மராட்டியத்திற்கு பிடித்துவருவேன் என்பார். தற்போது தாவூத் இப்ராகிமின் ஏஜெண்டுகளை தேடி எங்களுக்கு பின்னால் அலைகிறார்கள். 
அமெரிக்க ராணுவம் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது, ஒசாமா பின்லேடனை கொன்றனர். நீங்கள் ஏன் தாவூத்தை கொல்ல கூடாது?. ஒசாமா பின்லேடன் போல தாவூத் இப்ராகிமை வீடு புகுந்து கொலை செய்யுங்கள். அது தான் தைரியம். ஆனால் நீங்கள் எதையும் செய்யாமல் எங்கள் மீது குற்றம்சாட்டுகிறீர்கள். 
பா.ஜனதா கட்சி ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முப்தியின் பி.டி.பி. கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்ததை நினைவுப்படுத்துகிறேன். அவர்கள் பயங்கரவாதி அப்சல் குருவை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்தவர்கள். அப்சல் குரு தேச துரோகி இல்லையா?.
 இவ்வாறு அவர் பேசினார்.
---------------

Next Story