கோமாரி தடுப்பூசி முகாம்


கோமாரி தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 25 March 2022 10:59 PM IST (Updated: 25 March 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தென்பாதியில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.

சீர்காழி:
சீர்காழி தென்பாதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கால்நடை டாக்டர் செல்லதுரை முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் முதுநிலை கால்நடை டாக்டர் ராஜா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் மணி ஆகியோரை கொண்ட குழுவினர் வீடுகளுக்கு நேரடியாக சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இதேபோல் கீழ தென்பாதி பகுதியில் நகரசபை உறுப்பினர் ரம்யா தலைமையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தி.மு.க. நிர்வாகிகள் தன்ராஜ், இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story