பரமத்திவேலூரில் ரூ.19½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.19½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ஒவ்வொரு வாரமும் தேங்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 20 ஆயிரத்து 621 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.97.09-க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.29-க்கும், சராசரியாக ரூ.92.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.18 லட்சத்து 89 ஆயிரத்து 658-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்துக்கு 22 ஆயிரத்து 424 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.70-க்கும், குறைந்த பட்சமாக ரூ.73.69-க்கும், சராசரியாக ரூ.88.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.19 லட்சத்து 48 ஆயிரத்து 383-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பின் விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story