பள்ளிபாளையம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்
பள்ளிபாளையம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு சாலையில் உள்ள முனியப்பன் நகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி பெண்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Related Tags :
Next Story