நல்லூர் போலீஸ் நிலையத்தில் பெண் என்ஜினீயர் காதல் கணவருடன் தஞ்சம்
நல்லூர் போலீஸ் நிலையத்தில் பெண் என்ஜினீயர் காதல் கணவருடன் தஞ்சம் அடைந்தார்.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள பெருங்குறிச்சி சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சிவா (வயது 25). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 4-ம் ஆண்டு மயக்கவியல் படித்து வருகிறார். திருச்செங்கோடு சிறுமொளசி அத்திபாளையத்தை சேர்ந்தவர் துரைபாண்டி மகள் கமலி (22). என்ஜினீயர். சிவா, கமலி ஆகியோர் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இதனால் பள்ளி பருவத்திலேயே அவர்களுக்குள் பழக்கம் இருந்து வந்தது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் கமலியின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், கமலியை கண்டித்தனர்.
இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் சென்னை வடபழனி முருகன் கோவிலில் உறவினர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் நேற்று பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோரையும் அழைத்து பேசினர். பின்னர் என்ஜினீயரான கமலியை அவரது காதல் கணவர் சிவா குடும்பத்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story